நீரிழிவை ஏற்படுத்தும் அரிசி
இந்தியர்களை பயமுறுத்தும் கொடிய நோய் நீரிழிவு நோய். சர்க்கரை நோய் வந்து விட்டால் எண்ணெய்ப் பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தாலும் இந்நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற்கதவாக இருப்பது தான் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. மருத்துவரிடம் சென்றால் தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள் என்பார். அது நல்லதும் கூட. சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளன.
இந்தியர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு புறமும் தட்ப வெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்சினையே என்று மறுபுறமும் உடல் உழைப்பு மிகவும் குறைந்து விட்டதை மறந்துவிடக் கூடாது என்று பேசுவோர் இன்னொரு பக்கமும் நின்று பட்டிமன்ற பாணியில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். சர்க்கரை நோயைப் பற்றி அண்மைய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப் படுத்துகிறது என்பதைக் கணக்கிடுவதற்கு ‘கிளைசெமிக் இண்டெக்ஸ்’ (Glycemic Index) என்று பெயர். சுருக்கமாக ‘ஜிஐ’. சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் ஜிஐ 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்தி ருக்கிறார்கள்.
சிங்கப்பூர்லிருது அதிரை கச்சா வீட்டு ஹாஜா
No comments:
Post a Comment