சுமார் 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட ஜமீன் தேவர்குள ஊராட் சிக்கு கமலா பாலகிருஷ்ணன் என்பவர் தலைவியாக உள்ளார். இந்தக் கிராமத்தில் அரசியல் மற்றும் சாதித் தலைவர்களின் கொடிகள், சுவரொட்டிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களில் இருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற எல்லாத் தெருக்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தி இருக்கிறோம்.அதேபோல் இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விஷன்’ புகைப்படக் கருவி வசதியும் உள்ளது. “எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிபெருக்கி மூலம் தெரிவிப்போம். “எந்தத் தகவலையும் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.
அலுவலகத்தில் உள்ள நோட்டு புத்தகத்தில் பெயர், என்ன காரணத் திற்காக ஒலிபெருக்கியில் பேசப் போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம். அத்துடன் காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பக்திப் பாடல்களைத் தினமும் ஒலிபரப்பு செய்கிறோம். “எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன.
“இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையைச் சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்கிறதோ அதற்குப் பக்கத்தில் உள்ள இரண்டு வீட்டுக்காரர்களிடமும் “இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது,” என்று எழுதி கையெழுத்து வாங்குகிறோம். என்றார்.

No comments:
Post a Comment